Madurai Malligai Flower |
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய, "பழைய மதுரையின்' மண்வளம், மல்லிகைக்கு ஏற்றது. இந்த மண்ணில் விளையும் மல்லிகைக்கு மட்டும் கூடுதல் மணம், வெண்மை உண்டு. இரண்டு நாட்கள் வரை பூக்கள் வாடமல் நன்றாக இருக்கும்.
பூவின் காம்பும், இதழ்களும் சம உயரத்தில் இருக்கும். மதுரை மல்லி வாசம் என்றே சிறப்புடன் காலம் காலமாக போற்றப்படுவதே, மதுரை மல்லிகைக்கு சிறப்பு. தமிழகத்தின் பல இடங்களில், பரவலாக மல்லிகைப் பூக்கள் விளைந்தாலும், மதுரையின் சிறப்பு வேறிடத்தில் இல்லை.
இந்த சிறப்புகளுக்காக, மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு' கிடைத்துள்ளது. நாட்டில் ஒரு பூவிற்கு "புவிசார் குறியீடு' கிடைத்தது, இதுவே முதல்முறை.
"புவிசார் குறியீடு" என்றல் என்ன:
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ (புவியியல்) அல்லது தோற்றத்தையோ, குறிப்பிடும் பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம், "புவிசார் குறியீடு' (Geo graphical Indication) எனப்படுகிறது. இக்குறியீடு, அந்த பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் சின்னமாக விளங்கும்.
இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. இச்சட்டம் 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, செப்.15, 2003ம் ஆண்டு அமலுக்கு வந்தது. தற்போது "அறிவுசார் சொத்துரிமை' (I.P.R-Intellectual Property Rights) இதழில், "மதுரை மல்லிகை"க்கு "புவிசார் குறியீடு' வழங்கப்பட்டுள்ளதாக, வெளியிடப்பட்டுள்ளது.
கலப்படம் செய்தால் "காப்பு":
- புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு, குறிப்பிட்ட விலையை இனி நிர்ணயிக்க முடியும்.
- இப்பெயரில், மற்ற பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்களை கலப்படம் செய்ய முடியாது. அப்படி செய்தால், 2 லட்சம் ரூபாய் அபராதம், ஐந்தாண்டு சிறை தண்டனை உண்டு.
இதன்படி மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட தமிழக பொருட்கள்:
- காஞ்சிபுரம் பட்டு
- பவானி ஜமுக்காளம்
- மதுரை சுங்குடி
- நாகர்கோவில் கோவில் நகைகள்
- தஞ்சாவூர் வண்ண ஓவியங்கள்
- தஞ்சாவூர் கலை தகடுகள்
- தஞ்சாவூர் பொம்மை
- சேலம் வெண்பட்டு
- கோவை கோரா பட்டு
- கோவை வெட் கிரைண்டர்
- ஆரணி பட்டு
- சுவாமிமலை வெண்கலப் பொருட்கள்
- விருப்பாச்சி மலை வாழை
- சிறுமலை மலை வாழை
- தற்போது மதுரை மல்லி
Source: Dinamalar-05-OCT-2012
No comments:
Post a Comment