Saturday, 6 October 2012

கிரையப் பத்திரத்தின் மூலம் சொத்து சொந்தமாகிவிடுவதில்லை

சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?

  • மாநில அரசின் பதிவுத் துறை (Registration Department) யும்,
  • மாநில அரசின் வருவாய்த் துறை (Revenue Department) யும்,
சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபின்இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.  

பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் எ‎ன்ன? சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களே‎ன். 


நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. 

இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம்

ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும், வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது. 

இந்தத் துறையின் பதிவேட்டில்:
  • ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்.
  • அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும்.
  • நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை ன்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். ‏ தை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.


அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?

வருவாய்த் துறை (Revenue Department) யில்தான் நிலத்திற்கான விவரங்கள் னைத்தும் இருக்கும்.
  1. பட்டா (Patta),
  2. சிட்டா (Chitta),
  3. அடங்கல் (Adangal),
  4. 'அ' பதிவேடு (‘A' Register),
  5. நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
என ஐந்து வகையான பதிவேடுகளை‏ இந்தத் துறை பராமரிக்கிறது. 


பட்டா (Patta) :


நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பட்டா என்பது.
ஒரு
நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில்:


  • மாவட்டத்தின் பெயர்
  • ஊரின் பெயர்,
  • பட்டா எண்,
  • உரிமையாளர் பெயர்,
  • புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision),
  • நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா,
  • நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.


சிட்டா (Chitta):

ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில்
  • சொத்தின் உரிமையாளர் பெயர்,
  • பட்டா எண்கள்,
  • நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு,
  • தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல்' (Adangal):
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான்அடங்கல்' என்பது. இதில்

  • குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது,
  • பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள்
இதில் இருக்கும்.


'அ' பதிவேட்டில் (‘A' Register):

  1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
  2. ரயத்துவாரி(), சர்க்கார் (), அல்லது இனாம் (),
  3. நன்செய் (), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ..), புறம்போக்கு,
  4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
  5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை,  போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை  (FMB) :  
  • இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
  • நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் என்பது.
  • நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.
இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment