இன்சூரன்ஸ் என்பது
கட்டயமாக்கப்பட்ட ஒன்று.
போலீஸார் சோதனை
நடத்தும் போது,
இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கண்டிப்பாக ஆய்வு
செய்வார். எனவே,
கார்
மற்றும் பைக்குக்கு இன்சூரன்ஸ் செய்ய
வேண்டும் என்பதை
வாகன
ஓட்டிகள் நன்கு
உணர்ந்து இருப்பர். ஆனால்,
பெரும்பான்மையானோர் சோம்பறிதனத்தினால், வாகனத்துக்கு இன்சூரன்ஸை ஆண்டுக்கு ஆண்டு
புதுப்பிக்க மறந்து
விடுவர். வாகனம்
விபத்தில் சிக்கும் போது
தான்,
இன்சூரன்ஸின் உண்மை
நிலை
அவர்கள் உணர
தொடங்குவர்.
வாகன
இன்சூரன்ஸ் கட்டயமாக்கப்பட்ட ஒன்று
என்றாலும், அதற்கான பிரிமியம் தொகையை
பல
வகையிலும் குறைக்க முடியும். அதற்கு
முத்தான 9 வழிகள்
இதோ.
- வாகனத்தின் மாடல் மற்றும் வகை: கார் அல்லது பைக்கை பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வாகனம், அடிக்கடி விபத்துக்குள்ளாவது, விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் வடிவமைப்பு இருப்பது போன்ற காரணத்துக்காக அந்த வாகனத்துக்கும் மட்டும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூடுதல் பிரிமியம் வசூலிப்பர். எனவே, எந்த மாடல், எந்த வகை வாகனத்துக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டால், பிரிமியம் தொகை குறையும். சில மாடல் வாகனங்கள், பராமரிப்பு செலவு குறைந்ததாக இருக்கும். அந்த வாகனங்களுக்கும் குறைந்த பிரிமியம் தான் வசூலிக்கப்படுகிறது.
- டிரைவரின் பாலினம்: வெளிநாடுகளில், வாகனத்தை ஓட்டுபவர் ஆணா பெண்ணா? என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு பிரிமியம் தொகை வசூலிக்கின்றனர். ஆண் என்றால், குறைந்த பிரிமியம், பெண் என்றால் அதிக பிரிமியம் தொகை என்ற நிலைமை பல நாடுகளில் காணப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை. எனினும், பஜாஜ் அலியான்ஸ் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆண் டிரைவர்களை விட பெண்கள் சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர் என்று கருதுகின்றனர். எனவே, பெண்கள் பெயரில் இன்சூரன்ஸ் பதியும் போது சில சலுகைகளை அளிக்கின்றனர்.
- வாகனம் ஓடும் நகரம்: வாகனம் எந்த நகரத்தில் பதிவு செய்யப்பட்டது, எந்த நகரில் ஓடுகிறது என்பதையும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவனிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் உள்ள நகரத்தில், வாகனங்களுக்கு உரசி செல்வதால் ஏற்படும் சிறிய சேதங்கள் தான் ஏற்படும். ஆனால், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது ஏற்படும் விபத்தில் வாகனங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகும். எனவே, இன்சூரன்ஸ் புக் செய்யும் போது எந்த நகரத்தில் ஓடுகிறது/ ஓடப்போகிறது என்பதை தெளிவாக குறிப்பிட்டால், அதற்கு ஏற்றவாறு, பிரிமியம் தொகை கணக்கிடப்படும். பெரிய நகரங்கள் என்றால், பிரிமியம் தொகை குறைய வாய்ப்பு உள்ளது.
- வாகனம் ஓட்டுபவரின் பணி: கார் அல்லது பைக்கை ஓட்டுகிறவர் என்ன பணி செய்கிறார் என்பதை பொருத்தும் பிரிமியம் தொகை குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். தினமும் அலுவலகம் செல்பவர் என்றால், அலுவலகம் மற்றும் வீட்டுக்கு செல்லத் தான் அந்த வாகனத்தை பயன்படுத்துவார். ஆனால், சிறு வணிகம் செய்பவர் என்றால், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் வாகனத்தை செலுத்துவார். எனவே, வாகனம் ஓட்டுபவர் என்ன பணி செய்கிறார் என்பதை பொருத்தே பிரிமியம் தொகையும் கணக்கிடப்படுகிறது.
- கிளைம் செய்யாவிடில் போனஸ்: வாகன இன்சூரன்ஸ் செய்து இருப்பவர், அந்த வாகனம் சிறு சிறு விபத்துக்களில் சிக்கும் போது ஆகும் செலவை, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கிளைம் செய்யாவிடில், ஆண்டுதோறும் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, 'நோ கிளைம் போனஸ்' என்ற பெயரில் பிரிமியம் தொகையில் சிறிதளவு குறைக்கப்படுகிறது. ஆனால், இன்சூரன்ஸை புதுபிக்கும் போது எவ்வித தாமதத்தையும் காட்டாமல், உடனுக்கு உடன் புதுப்பித்தால், இந்த தள்ளுபடி சலுகை பெறாலம். கிட்டத்தட்ட பிரிமியம் தொகையில் 35 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
- பாதுகாப்பு சாதனங்கள்: கார் அல்லது பைக், திருடு போகாமல் இருக்க, விபத்தின் போது பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களை பொருத்தி இருந்தால், அதற்கு ஏற்றவாறு பிரிமியம் தொகை குறையும்.
- வாகனத்தின் உரிமையாளர் ஆட்டோமொபைல் சங்க உறுப்பினராக இருந்தால், 5 சதவீதம் வரை, பிரிமியம் தொகையில் குறைக்கப்படும்.
- குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் முதல், சில காலம் வரை வாகனம் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்தால், இன்சூரன்ஸ் காலத்தை நீட்டிக்க செய்யலாம் அல்லது இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது சில தள்ளுபடி சலுகை பெறலாம். எனினும், குறிப்பிட்ட காலத்துக்கு வாகனத்தை பயன்படுத்த போவதில்லை என்பதை, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் இந்த சலுகை கிடைக்கும்.
- ஆன் லைனில் பதிவு: ராயல் சுந்தரம், பஜாஜ் அலியான்ஸ் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆன் லைன் மூலம் வாகன இன்சூரன்ஸ் மேற்கொள்ளும் நபர்களுக்கு பிரிமியம் தொகையில் தள்ளுபடி சலுகை அளிக்கின்றனர்.
இவ்வாறு வாகன இன்சூரன்ஸின் பிரிமியம் தொகையை ஓரளவுக்கு குறைக்க முடியும்.
No comments:
Post a Comment